×

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பம்

நாகர்கோவில், செப்.27: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in , http://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணத்தில் நேரில் 03.10.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kumari District ,Dinakaran ,
× RELATED காதலனுடன் சென்ற இளம்பெண் பலாத்காரம்: நிர்வாணமாக்கி சரமாரி தாக்குதல்