திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை

திருவில்லிபுத்தூர், செப்.25: திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் நேற்று மழை பெய்தது. தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் பலத்த மற்றும் பரவலான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. வானிலை மையம் அறிவித்தது போல் திருவல்லிபுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக சிறிது நேரம் மழை பெய்து வருகிறது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மலை உச்சி பகுதியில் மட்டும் நேற்று மழை பெய்துள்ளது.

இது குறித்து மலைவாழ் மக்கள் சிலர் கூறும்போது, செண்பகத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் லேசான மழை பெய்தது. மலை உச்சிப் பகுதியில் மட்டும் பலத்த மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் அடிவாரப் பகுதியில் உள்ள ஓடைகள், அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். தொடர்ச்சியாக மழை இல்லாததால் மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதியில் காய்ந்து போய் கிடந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் பசுமையாக காட்சியளிக்கிறது என தெரிவித்தனர்.

The post திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: