காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவிற்கு தமிழ்நாடு மாநில உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் விருது

சென்னை: காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவிற்கு, தமிழ்நாடு மாநில உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் கவுரவமிக்க விருதை வழங்கி பாராட்டியிருக்கிறது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: காவேரி மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழு, இந்த சிகிச்சையைப் பெறும் நோயாளிகளுக்கு கனிவும், அக்கறையும் கொண்ட விரிவான பராமரிப்பை வழங்குகிறது. காவேரி மருத்துவமனையில் நடைபெறும் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைகள் நிலையாக வெற்றிகரமான விளைவுகளைப் பெற்றுத் தருவதற்கு ஒரு மிக முக்கிய காரணியாக உறுப்புதானம் அளிப்பவர்கள் மற்றும் தானம் பெறும் நோயாளிகள் ஆகிய இருவருக்கிடையிலான பொருந்து நிலையை சரியாக கண்டறிவதில் இக்குழுவினரின் நிபுணத்துவம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையின், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி கூறுகையில்,‘‘டிரான்ஸ்டான் அமைப்பிடமிருந்து கிடைத்திருக்கும் இவ்விருதும், அங்கீகாரமும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கவுரவமாகும். இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் மேன்மையான விளைவுகளை உறுதி செய்வதில் எமது குழுவினர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் இவ்விருது சுட்டிக்காட்டுகிறது. எங்களது செயல்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாக விளங்கும் இவ்விருது, எமது சிகிச்சை தரநிலைகளை மேலும் மேம்படுத்துவதற்கு எங்களுக்கு உத்வேகமளிக்கிறது’’ என்றார்.

The post காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவிற்கு தமிழ்நாடு மாநில உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் விருது appeared first on Dinakaran.

Related Stories: