×

மின்மோட்டார் பழுதால் கள்ளிப்பட்டியில் காட்சிப்பொருளாக காணப்படும் குளியல் தொட்டி

சிவகாசி, செப்.23: சிவகாசி அருகே கள்ளிப்பட்டியில் மின் மோட்டார் பழுது காரணமாக குளியல் தொட்டி செயல்படாததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். சிவகாசி அருகே நெடுங்குளம் ஊராட்சி கள்ளிப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வாழை, கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்காகவும், இளைஞர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வேலைக்காகவும் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

இரவு வீடு திரும்பும் தொழிலாளர்கள் இங்குள்ள குளியல் தொட்டியில் குளித்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளியல் தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சீரமைக்கக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதான மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்மோட்டார் பழுதால் கள்ளிப்பட்டியில் காட்சிப்பொருளாக காணப்படும் குளியல் தொட்டி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Kolipatti ,Dinakaran ,
× RELATED சிவகாசி நகர் பகுதிகளில் குவிந்து...