×

நோபிள் பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை

 

விருதுநகர், செப்.23: தாய்லாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன் யுனிவர்சல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் யுனிவர்சல் யோகா அலையன்ஸ் சார்பில் ஆசிய பசிபிக் யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நோபிள் பள்ளி மாணவன் கிரித்திக் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வெற்றான்.

வெற்றி பெற்ற மாணவன் கிரித்திக்கை தாய்லாந்து யுனிவர்சல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேசன் தலைவர் சுரேஷ்குமார், இயக்குநர் ஜோதிபால் மற்றும் நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர். உலக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவனை நோபிள் பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ, துணைத்தலைவர் நிஜிஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

The post நோபிள் பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Noble School ,Virudhunagar ,Thailand ,Universal Yoga Sports Federation ,Universal Yoga… ,
× RELATED நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை