
- வேடசந்தூர்
- திண்டுக்கல் மாவட்டம்
- கருக்காம்பட்டி
- வேடசந்தூர்
- கரூர் திண்டிகுல் தேசிய நெடுஞ்சாலை
- பெங்களூரு
- தின மலர்
வேடசந்தூர், செப். 23: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து கொடைக்கானலை நோக்கி நேற்று 14 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்சை மைசூரைச் சேர்ந்த நசுருல்லா என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது கரூர் தென்னிலையில் இருந்து வந்த லாரி பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாரியின் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post பஸ் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.