×

அசோகபுரம் ஊராட்சி 17 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

 

பெ.நா.பாளையம், செப்.23: கோவை அசோகபுரம் ஊராட்சி 2வது வார்டு காந்தி காலனியில் புதிய கீழ் நிலை நீர் தேக்க தொட்டிகட்டும் பணியை ஊராட்சி தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.தற்போது முதல் வார்டில் உள்ள கீழ்நிலை தொட்டியில் இருந்து காந்தி காலனி, வெங்கட்டம்மாள் காலனி. சுபிட்சா கார்டன், சிறுகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள குடியிறுப்பு பகுதிகளுக்கு அத்தி கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆதி திராவிடர் நலநிதி ரூபாய் 17 லட்சத்தில் கட்டபடும் இந்த புதிய நீர் தேக்க தொட்டி மூலம் நேரடியாக அத்திக்கடவு குடிநீர் சேமிக்கப்பட்டு குடியிறுப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒன்றிய கவுன்சிலர் கலாசாந்தாராம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி செந்தில் ராஜா, வார்டு உறுப்பினர் முருகம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post அசோகபுரம் ஊராட்சி 17 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ashokapuram panchayat ,B.N.Palayam ,Coimbatore ,Ashokapuram Panchayat 2nd Ward Gandhi Colony ,Level Water Reservoir ,
× RELATED கோவை – கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள...