மிலாடிநபி, காந்திஜெயந்தியை முன்னிட்டு செப்.28, அக்.2ல் டாஸ்மாக் கடைகள் மூடல்

தென்காசி, செப்.23: மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 28ம் தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதியும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற 28ம் தேதி (வியாழன்) மிலாடி நபியை முன்னிட்டும், அக்டோபர் 2ம் தேதி (திங்கள்) காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மேற்கண்ட 2 தினங்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும்.

The post மிலாடிநபி, காந்திஜெயந்தியை முன்னிட்டு செப்.28, அக்.2ல் டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: