×

ஒடும் ரயிலில் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை

அயோத்தியா: உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பெண் காவலரை தாக்கியவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் காவலர் தனியாக பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த 3 பேர் காவலரை கடுமையாக தாக்கினார்கள். இதனால் உயிருக்கு போராடிய அந்த காவலர் மீட்கப்பட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அயோத்தியா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாமாக முன்வந்து இந்த வழக்கை ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் ரயில்வே போலீசார் மற்றும் மாநில அரசை கடுமையாக விமர்சித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் சம்பந்தப்பட்ட 3 பேரையும் அடையாளம் கண்டறிந்து கைது செய்ய முயற்சித்தனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் காவலரை தாக்கிய முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டான். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post ஒடும் ரயிலில் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Odom ,Ayodhya ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED இரவு நேரத்தில் தகாத உறவு காதலனுடன்...