வங்கத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்தில் விளையாட்டில் இந்திய ஆடவர் அணி ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் சீனா, வாங்கதேசம், மியான்மர் அணிகள் இடம் பெற்றுளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவிடம் 1-5என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த இந்திய வீரர்கள் 2வது பாதியில் வேகத்தை அதிகப்படுத்தினர். வங்கமும் வெற்றிக்காக முனைப்புக் காட்டியது. அதன் விளைவாக ஆட்டத்தில் அவ்வப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் வங்க கேப்டன் ரகமத் மியா செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய இந்தியக் கேப்டன் சுனில் சேட்ரி கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வர இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் செப்.24ம் தேதி மியான்மரை எதிர்கொள்கிறது. அதில் வெற்றிப் பெறும் அணி நாக் அவுட் சுற்றுக்குள் நுழையும். டிராவானாலும் கோல்கள் அடிப்படையில் மியான்மர் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்ற வங்கதேசம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோத உள்ளது.

The post வங்கத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: