காவிரி நீர் பெற்றுத்தராத ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் கண்டனம்: காய்ந்த குறுவை நெற்பயிருக்கு பாடைக்கட்டி பேரணி

நாகை: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்து நாகை விவசாயிகள் பயிர்களை அடித்தும் ஒப்பாரி பாடல் பாடியும் போராட்டம் நடத்தினர். காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றன. இதனால் சாகுபடி செய்து 80 நாட்களான பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் வழங்காமல் கர்நாடக அரசும் அலைக்கழித்து வருகிறது.

இந்நிலையில், சாகுபடிக்கு தேவையான காவிரி நீர் வழங்கும் ஒன்றிய மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து நாகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பெண் விவசாயிகள் கலந்து கொண்டு ஒப்பாரி பாடல் பாடியும், கும்மி அடித்தும் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ந்து காய்ந்த குறுவை நெற்பயிருக்கு பாடை கட்டியும் விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர். தண்ணீர் இன்றி விளை நிலம் பாலம் பாலமாக வெடித்து வருவதை சுட்டிக்காட்டி விவசாயிகள் வயலில் இறங்கி கண்களில் கருப்பு துணிகளை கட்டி போராட்டம் நடத்தினர். அப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.

The post காவிரி நீர் பெற்றுத்தராத ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் கண்டனம்: காய்ந்த குறுவை நெற்பயிருக்கு பாடைக்கட்டி பேரணி appeared first on Dinakaran.

Related Stories: