அக்.7 மற்றும் 8ல் நடக்கிறது இறகுப்பந்து போட்டி

சிவகங்கை, செப். 21: சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழகத்தின் சார்பில். மாவட்ட இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து மாவட்ட இறகுப்பந்து கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அக்.7 மற்றும் அக்.8 ஆகிய இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில், 9, 11, 15, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இவர்களுக்கு தனித்தனியே ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் 9 மற்றும் 11 வயது பிரிவு போட்டிகள் சிவகங்கையிலும் மற்ற பிரிவினருக்கான போட்டிகள் காரைக்குடியிலும் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் வயது சான்றிதழ் கொடுக்க வேண்டும். வரும் அக்.4ம் தேதிக்குள் nsmsports@gmail.com என்ற இணையதளத்தில் அவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அக்.7 மற்றும் 8ல் நடக்கிறது இறகுப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: