எரிச்சநத்தம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

சிவகாசி, செப்.20: சிவகாசி அருகே எரிச்சநத்தம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமில் 757 பயணாளிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். சிவகாசி அருகே எரிச்சநத்தம் ஊராட்சி  நயினார்சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார் தலைமையில் மருத்துவ குழு அடங்கிய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.

முகாமில் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை, அனைத்து விதமான இரத்த பரிசோதனைகள், டிஜிட்டல் எக்ஸ்ரே என அனைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எரிச்சநத்தம், நடையனேி, கொத்தனேரி, குமிழங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் என 757 பயணாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபுத்திரன், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் செய்திருந்தனர்.

The post எரிச்சநத்தம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: