14ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பவுன் ரூ.43,840க்கு விற்பனையானது. 15ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து 16ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,530க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.400 வரை அதிகரித்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலையில் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது, இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,540க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.
The post தங்கம் விலை தொடர் ஏற்றம்; 3 நாட்களில் பவுன் ₹480 உயர்ந்தது appeared first on Dinakaran.