×

வலங்கைமான் அரசு பெண்கள் பள்ளியில் 125 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

 

வலங்கைமான், செப். 16: வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை கணேஷ்வதி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் புருஷோத்தமன்,
துணை செயலர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆப்சாத் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 125 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் சிவனேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பி.டி.ஏ நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .

The post வலங்கைமான் அரசு பெண்கள் பள்ளியில் 125 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Walangaiman Government Girls School ,Valangaiman ,Tamil Nadu government ,Valangaiman Government Girls High School ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...