பொன்னமராவதி,செப்.16: பொன்னமராவதி அருகே குமாரப்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாரம் திருக்களம்பூர் ஊராட்சி, குமாரபட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு மேலைச்சிவபுரிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விரிவான விழிப்புணர்வும் ஏடிஸ் கொசுப் புழுவை காண்பித்து நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்திற்க்குள் கர்ப்பத்தை பதிவு செய்தல் அதன் வழியாக பிறப்புச் சான்று பெறுதல், தொற்று தொற்றா நோய்களுக்காக மாத்திரை வாங்குவோர் இடைநிற்காமல் தொடர்ந்து வாங்கி உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் முன்தடுப்பு முறைகள் மருத்துவமனை சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றியும் நல்ல தண்ணீரை கொசுக்கள் புகா வண்ணம் மூடி வைத்தல் தொட்டியை சுத்தம் செய்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன் பிரேம்குமார், பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதி அருகே குமாரப்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
