வார இறுதியில் எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தங்கம் விலை 9ம் தேதி சவரன் ரூ.44,080க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,120க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,480க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது.

இந்த மாதத்தில் திருமணம் உள்பட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. தங்கம் விலை நேற்று எந்த மாற்றமுமில்லாத நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ .5,500 ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,505 ஆகவும், சவரனுக்கு ரூ . 128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

The post வார இறுதியில் எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: