சென்னை : கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் நிலையில், திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்லபொறிக்கப்படும் என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்குகிறார். இத்திட்டத்தில் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பேர் பயனடைகின்றனர். அதே நேரத்தில் வங்கிகள் மூலம் நேற்று முதல் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருவதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த திட்டம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், பிறந்த மண்ணில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் பக்கபலமிருந்து தக்கபயன் நல்குவதாகும் திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்லபொறிக்கப்படும் : கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.