இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சரண்குமார் குடிபோதையில் இருந்தார். அப்போது அவர் படகின் பின்புற பகுதிக்குச் சென்றுள்ளார். காலையில் டீ கொடுப்பதற்காக சென்றபோது சரண்குமார் விசைப்படகில் இருந்து மாயமானது எங்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நாங்கள் கடலில் சரண்குமாரை தேடிப் பார்த்தோம். ஆனால் அவர் கிடைக்காததால் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு வயர்லெஸ் மூலம் ஓட்டுனர் தகவல் தெரிவித்தார் என்றனர். இதனையடுத்து கடலில் இருந்து மீனவர்கள் கரைக்கு திரும்பினர். பின்னர் காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையம் மற்றும் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சரண்குமாரின் தாய் நீலவேணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சரண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post விசைப்படகில் மீன்பிடிக்க சென்றபோது ஆழ்கடலில் மீனவர் மாயம் appeared first on Dinakaran.