இயற்கையிலேயே தமிழ் இசைமை வாய்ந்த மொழி

மன்னார்குடி, செப். 13: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்த புத்தகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ் கூடல் இலக்கிய நிகழ்வு பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வன் தலைமையில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராசு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை உதவி தலைமை ஆசிரியர் முருகையன் ஒருங்கிணைத்தார். இதில், கல்விச் செயற்பாட்டாளர் பாவலர் இராச கணேசன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு தமிழும் இசையும் என்னும் தலைப்பில் பேசுகையில், இயற்கையிலேயே தமிழ் இசைமை வாய்ந்த மொழியாகும். வல்லினம், மெல் லினம், இடையினம் என இசை நுட்பங்களை எல்லாம் ஒருங்கே கொண்ட தமிழ் நெடுங் கணக்கு எனும் தொகுப்பாகும்.

மற்ற மொழிகளை காட்டிலும் தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரி வே விளங்குகின்றது.. இறைவனை யே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது.. பிற மொழி கலப்பின்றி தனித்து இயங்கும் தன்மை தமிழுக்கு உண்டு. தமி ழிசை வளர்த்த மூவரோடு, தேவார திருப்பதிகங்களும், வள்ளலாருடைய கீர்த்தனைகளும் தமிழிசை உலகில் சிறந்த சான்றுகளாகும். மாணவர்கள் நாட்டுப்புற இசை, ஒப்பாரி, தாலாட்டு, நடவுப் பாடல்கள், தெம்மாங்கு இவற் றில் உள்ள செவ்வியல் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து, பேச்சு, கவிதை மற்றும் பாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக, கலை ஆசிரி யர் விவேகானந்தன் வரவேற்றார். கணித ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

The post இயற்கையிலேயே தமிழ் இசைமை வாய்ந்த மொழி appeared first on Dinakaran.

Related Stories: