அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு பட்டீஸ்வரத்தில் தமிழ் பால் நிறுவன விநியோக மையம் திறப்பு

தஞ்சாவூர், செப். 13: தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம், காமராஜர் சாலையில், தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் கடந்த 10ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விநியோகமையமான திவ்யா ஏஜென்சி விநியோகஸ்தரான தினேஷ் வரவேற்றார். தமிழ் பால் நிறுவன செயல் இயக்குநர் கே.தியாகராஜன் புதிய விநியோக மையத்தை திறந்து வைத்தார். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மேலாளர் பி.சிவக்குமார் முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், இளைஞர்கள், வாழ்வில் முன்னேறுவதற்கும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தற்போது 90க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் 10 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழ் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையத்தை கொண்டு வருவதே தமிழ் பால் நிறுவனத்தின் நோக்கம். ஒவ்வொரு ஊரிலும் பால் விநியோக மையத்தை அமைத்து வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், அவர்களும் வாழ்வில் வளர்ச்சி பெறலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ் பால் நிறுவன விற்பனை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு பட்டீஸ்வரத்தில் தமிழ் பால் நிறுவன விநியோக மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: