குழித்துறையில் 56 மி.மீ பதிவு குமரி முழுவதும் சாரல் மழைநீடிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் குழித்துறையில் 56 மி.மீ மழை பதிவாகியிருந்தது.குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டியதால் அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அதனால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அணைகளில் நீர் இருப்பு குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகின்ற நிலையில் அணைகளின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக குழித்துறையில் 55.80 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான சராசரி மழையளவு 7.53 மி.மீ ஆகும். நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.52 அடியாகும். அணைக்கு 839 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 1085 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 73.29 அடியாகும். அணைக்கு 748 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.33 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 27 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.சிற்றார்-2ல் 16.43 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கை அணை நீர்மட்டம் 42.70 அடியாகும். அணைக்கு 12 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 12 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.05 அடியாகும். அணைக்கு 2 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் அணை மூடப்பட்டிருந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 9 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.ஆர்ப்பரிக்கும் திற்பரப்புகுலசேகரம்: குமரியில் கொட்டி தீர்த்த  கனமழையாலும், அணைகளில் மறுகால் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும்,  கோதையாற்றில் வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் வரத்து அதிகம் இருந்து வருகிறது.  இதனால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இந்த  ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் திற்பரப்பு அருவியில் அதிகளவு தண்ணீர்  ஆர்ப்பரிக்கிறது. ஆனாலும் அருவி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா  பயணிகளால் குளித்து மகிழ முடியாத நிலை இருந்து வருகிறது. இருப்பினும் பிற  இடங்களுக்கு சுற்றுலா வருபவர்கள், திற்பரப்பு அருவிக்கும் வருகின்றனர்.  அவர்கள் அருவியின் மேல்பகுதியில் உல்லாச படகு சவாரி செய்தும், தடுப்பணையில்  குளித்தும் மகிழ்கின்றனர்.பருவமழை தொடங்கியதில் இருந்து  திற்பரப்பு பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மேலும்  அவ்வப்போது சாரல் மழை ெபய்வதும், இதமான காற்று வீசுவதும் என குளுகுளுவென இருப்பதால் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் உள்ளது….

The post குழித்துறையில் 56 மி.மீ பதிவு குமரி முழுவதும் சாரல் மழைநீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: