வதிலை மல்லணம்பட்டியில் ஆசிரியர் தின விழா

வத்தலக்குண்டு, செப். 8: வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வதிலை ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பட்டய தலைவர் மாதவன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் கஜேந்திரன் சிறப்புரையாற்றினார். விழாவில் ஆசிரியர்களுக்கு புத்தகம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதில் பட்டய செயலாளர் விஜயன், முன்னாள் தலைவர் இளஞ்செழியன், நிர்வாகிகள் சக்திவேல், விஜயகர், ரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி நிர்வாகி மணிகண்டன் நன்றி கூறினார்.

The post வதிலை மல்லணம்பட்டியில் ஆசிரியர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: