இயற்கை பேரிடர் விழிப்புணர்வு கூட்டம்

ராஜபாளையம், செப்.5: ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயற்கைப் பேரிடர் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், சத்ய சாய் அமைப்பின் இயற்கைப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இருளப்பராஜா ஆகியோர், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்துக்களை காணொளிக் காட்சிகளின் மூலம் விளக்கிக் கூறினார்கள். புயல், சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளியில் எதிர்பாராத விதமாக மாணவர்களுக்கு ஏற்படும் ரத்தக்காயங்கள், எலும்பு முறிவு, மயக்கம், கால்கை வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பவை குறித்து விளக்கினர். நிறைவாக, உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை, பசுமைப்படையினர் செய்திருந்தனர்.

The post இயற்கை பேரிடர் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: