கடமலைக்குண்டு அருகே புதிய தடுப்பணை பணி நிறைவு

வருசநாடு, செப். 4: கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஓடை உள்ளது. இங்கு மழைக்காலங்களில் பாலுத்து, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் வரக்கூடிய மழைநீர் இந்த ஓடை வழியாக மூல வைகை ஆற்றுக்கு செல்கிறது. எனவே இந்த ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதனை க.மயிலாடும்பாறை ஒன்றியப் பொறியாளர்கள், பாலூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார், துணைத் தலைவர் பாலு மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த ஓடையில் தடுப்பணையை கட்டி நீரை தேக்கி வைத்தால் இந்த பகுதியில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது தடுப்பணை கட்டும் பணிகள் நடந்து முடிந்து விட்டது ” என்றனர்.

The post கடமலைக்குண்டு அருகே புதிய தடுப்பணை பணி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: