மணமேல்குடியில் சைபர் கிரைம் குற்றங்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

அறந்தாங்கி, செப்.2: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, மணமேல்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சைபர் குற்றங்கள், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கோட்டைப்பட்டிணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கெளதம் தலைமை வகித்தார். இந்த ஊர்வலம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கியது.

ஊர்வலத்தில் சைபர் குற்றங்கள், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சைபர் குற்ற உதவி எண் 1930 என்ற பதாக்கைகளுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களுடன் மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. மணமேல்குடி முக்கிய வீதிகள் வழியாக வந்து மணமேல்குடி காவல்நிலையம் வந்து காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மாவட்ட போலீஸ் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மணமேல்குடியில் சைபர் கிரைம் குற்றங்கள் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: