மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தீர்மானம்

 

கீழ்வேளூர், செப்.2: கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டத்தில், தமிழகத்தில் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்திசேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் கொண்டு வந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரம் பள்ளியில் உள்ள 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கீழ்வேளூர் மேல வீதியில் ரூ.5.30 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைக்கவும், கீழ்வேளூர் ஜீவாநகரில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் குளத்தில் படித்துறை அமைக்கவும், 3வது வார்டில் உள்ள பொதுக் கழிவறையை ரூ.5.30 லட்சத்தில் புனரமைப்பு பணிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

The post மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: