சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஓட்டுநர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், செப்.2: ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் சிஐடியு டாக்ஸி வேன் ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் சாலை போக்குவரத்து சங்கத்தினர் இணைந்து ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ங்கவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கணேசன், சிஐடியு கன்வீனர் சுப்பிரமணியம், சாலைப்போக்குவரத்து சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணன், விஜயகுமார் உட்பட வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

The post சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஓட்டுநர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: