ராஞ்சி: விவசாய நிலத்தில் பன்றிகளை மேய்ச்சலுக்கு விட்டதால் ஏற்பட்ட சண்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அடுத்த ஓர்மன்ஜி பகுதியில் வசிக்கும் விவசாயின் பண்ணை நிலத்தில், பக்கத்து விவசாயி வளர்த்து வரும் பன்றிகள் நுழைந்து பயிர்களை அட்டகாசம் செய்து வந்தன. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை மர்ம நபர்கள் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து ராஞ்சி ரூரல் எஸ்பி ஹரிஸ் பின் ஜமான் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு வயல்களில் பன்றிகள் நுழைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கும் மற்றொரு விவசாயின் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக விவசாய கருவிகளுடன் ஆயுதம் ஏந்திய சுமார் 10 பேர், பன்றிகளை வளர்த்து வந்த குடும்பத்தினரின் வீட்டுக்குள் நுழைந்து அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம். மொத்தம் பதினொரு பேர், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.
The post விவசாய நிலத்தை நாசம் செய்த பன்றிகளால் 2 பெண்கள் உட்பட 3 பேர் கொலை: ஜார்கண்டில் அதிர்ச்சி appeared first on Dinakaran.
