திருவையாறில்ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி முகாம்:பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு

திருவையாறு, செப். 1: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருவையாறு வட்டார வள மையத்தின் சார்பில் 9 மற்றும் 10ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பீட்டர் தொடங்கி வைத்தார். தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் வரலாறு ஆகிய பாடங்களில் உள்ள கற்றல் விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இப்பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் குமார் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் அசோகன், ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர். திருவையாறு ஒன்றியத்தில் உள்ள 69 ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் ஒருங்கிணைத்தார்.

The post திருவையாறில்ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி முகாம்:பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: