ராமநாதபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம், ஆக.29: ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவ ட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு, சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஜெயசீலன் வரவேற்றார்.

போராட்டத்தின் போது மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக உருவாக்க வேண்டும். ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும். நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முத்து முருகன் நன்றி கூறினார்.

The post ராமநாதபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: