சங்கத்தலைவர் மட்டும் உபயோகப்படுத்திய டிராக்டரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிர்வாகிகள்

 

திண்டிவனம், ஆக. 28: திண்டிவனம் அருகே சங்கத்தலைவர் மட்டும் பயன்படுத்திய டிராக்டரை உறுப்பினர்கள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் உதயம் வேளாண் கருவிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உள்ளது. சங்கத்துக்கு தலைவராக அதே பகுதியை சேர்ந்த உதயம் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு டிராக்டர் வாங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த டிராக்டரை சங்கத்தலைவர் மட்டுமே உபயோகப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சங்கத்தில் உள்ள 8 உறுப்பினர்கள், தாங்களும் டிராக்டரை பயன்படுத்த வேண்டும் என சங்கத்தலைவரிடம் தொடர்ந்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் இயங்கி கொண்டிருந்த டிராக்டரை உறுப்பினர்கள் மீட்டு, வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார், இரு தரப்பையும் விசாரணை செய்து முடிவெடுக்கப்படும் என்பதால் டிராக்டர் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post சங்கத்தலைவர் மட்டும் உபயோகப்படுத்திய டிராக்டரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Related Stories: