அரியலூர்- செந்துறை நான்குவழி சாலைப்பணி நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் ஆய்வு

அரியலூர், ஆக.26: அரியலூர் முதல் செந்துறை வரை 17.2 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடைபெற்று வரும் நான்குவழிச்சாலை பணியினை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்த சாலையில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் 12 சிறு பாலங்கள் அகலப்படுத்துதல் பணி, 43 சிறுபாலங்கள் புதிதாக கட்டுதல் பணி, கொல்லாபுரம், தாமரைகுளம், ஓட்டகோவில், பொய்யாதநல்லூர், ராயபுரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 6.90 கி.மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாயக்கால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார்.

மேலும், பணிகளின் தரம், உறுதி தன்மை, சாலையின் மைய சரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது விழுப்புரம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ், அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தண்டி, விழுப்புரம் தர கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் அம்பிகா, உதவி கோட்ட பொறியாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், ராஜா மற்றும் உதவி பொறியாளர்கள் இளையபிரபுராஜன், முரளிதரன், சமயசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

The post அரியலூர்- செந்துறை நான்குவழி சாலைப்பணி நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: