திருக்கோவிலூரில் 2ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருக்கோவிலூர், ஆக. 24: திருக்கோவிலூர் பிடாரியம்மன் கோயில் எதிரில் 50 அடி தூரத்தில் புதைந்திருந்த உடைந்த 2ம் குலோத்துங்க காலத்துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் களஆய்வு மேற்கொண்டதில் திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோயிலுக்கு எதிரில் 50 அடி தூரத்தில் சாலை ஓரம் மண்ணில் நடப்பட்டிருந்த 12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் குலோத்துங்கன் கால உடைந்த நிலையில் முப்பட்டைத் துண்டுக் கல்வெட்டில் இரண்டு பட்டைகளில் இரண்டு இரண்டு வரிகளாக உள்ள நான்கு வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் ஸ்தனிஸ்லாஸ், நல்நூலகர் அன்பழகன், கலியபெருமாள் ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். வள நாட்டையும், அதற்குட்பட்ட குறுக்கைக் கூற்றத்தையும், திருக்கோவிலூரைப் பற்றிய செய்திக் காணப்படுகிறது. மேலும், திருக்கோவிலூரில் வீற்றிருக்கும் (வீரட்டான) உடைய நாயனாருக்கு, திருநாவலூரைச் சேர்ந்த செல்வனே நேயனேன் என்பவன் இவ்விறையவர்க்கு ஏதோ ஒரு கொடை கொடுத்திருக்க வேண்டும் என்பதை இத் துண்டு கல்வெட்டு மூலம் அறியவருகிறது.

The post திருக்கோவிலூரில் 2ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: