திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டிகள்

திண்டுக்கல், ஆக. 20: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா 2023 அக்.5ம் தேதி முதல் 15ம் தேதி வரை டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை பெருமளவில் பங்கேற்க செய்வதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. நேற்று திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் 6 முதல் 8ம் வகுப்பு வரையும், 9 மற்றும் 10ம் வகுப்பும், 11 மற்றும் 12ம் வகுப்பும், கல்லூரி மாணவர்கள் என நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

போட்டிக்கான துவக்க விழாவில் திண்டுக்கல் மைய ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். இலக்கிய கள செயற்குழு உறுப்பினர் சாமி, துணை செயலாளர் பாலசுந்தரி, நிர்வாகிகள் ஜெயராம், ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் வாழ்த்தி பேசினர். இந்த போட்டிகளில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: