குன்னம், ஆக.18: குன்னம் தாலுகா அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகரம்சீகூர் ஊராட்சியில் திட்டக்குடி பார்டர், வயலூர் கருப்பட்டங்குறிச்சி கிராமங்கள் உள்ளன. கருப்பட்டங்குறிச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் சுமார் 60 வருடங்களாக வயலூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
சுமார் 2 கிமீ தூரத்தில் வயலூர் கிராமம் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் எனவே கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை புதிய ேரஷன் கடை அமைக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கருப்பட்டங்குறிச்சி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவையான உணவு…
ஒவ்வொரு நாளும் ஒரு சத் தான உணவு மாணவ மாணவிகளுக்கு வழங்கப் படவுள்ளது. திங்கட் கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க் கிழமை கோதுமை ரவா கிச்சடி- காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண் பொங்கல்-காய்கறி சாம் பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி- காய்கறி சாம்பார் ஆகியவை வழங் கப்படவுள்ளது.
The post குன்னம் அருகே கருப்பட்டங்குறிச்சியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.
