பாளை. தூய யோவான் பள்ளியில் 374 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நெல்லை, ஆக. 17: பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், 374 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் வழங்கினார். விழாவிற்கு ெநல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை வகித்தார். மிலிட்டரி லைன் சேகர தலைவர் மதுரம், ஜெபம் செய்தார். பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் அருள் மாணிக்கம் வரவேற்றார். திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு, மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை கல்வி) தயாபதி நௌதம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கேஆர் ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பவுல்ராஜ், கவுன்சிலர்கள் சின்னத்தாய், நித்ய பாலையா, இந்திரா, சர்மிளா, பெருமன்ற உறுப்பினர் அகஸ்டின் முத்தையா, முன்னாள் கவுன்சிலர் கமாலுதீன், வட்டச் செயலாளர் ஜெயின் உசேன், வட்டப் பிரதிநிதிகள் கிருஷ்ணன், அகஸ்டின், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்தரம் முத்துராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, பொறியாளர் அணி சாய் பாபா, விவசாய அணி கால்வாய் துரைபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் சாத்ராக் ஞானதாசன் நன்றி கூறினார்.

The post பாளை. தூய யோவான் பள்ளியில் 374 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Related Stories: