புதுச்சேரி, ஆக. 15: தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணிக்க கூடாது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபின் தமிழிசை கூறுகையில், சுதந்திரப் போராட்டத்துக்காக போராடிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் தங்களது வீட்டில் தேசிய கொடிகளை ஏற்றி சுதந்திர தினத்தை பெருமைப்படுத்த வேண்டும். சுதந்திர தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தில் தெலுங்கானா முதல்வர் கலந்து கொள்வது இல்லை, அது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இதுபோல் தமிழகத்தில் ஆளுநரின் தேனீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது என்பது சரியல்ல. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கருத்து மோதல் இருக்கலாம் கருத்து பரப்புரையாக கூட இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக புறக்கணிப்பது சரியாக இருக்காது, என்றார்.
The post ஆளுநரின் தேனீர் விருந்தை முதல்வர் புறக்கணிக்க கூடாது appeared first on Dinakaran.
