ஊட்டச்சத்துக் குறைபாடு நிலையை மாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: ‘‘ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் அடைந்துள்ள பெரும் வெற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்கு செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன்.

அதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் “ஊட்டச்சத்தை உறுதிசெய்”. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஊட்டச்சத்துக் குறைபாடு நிலையை மாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட் appeared first on Dinakaran.

Related Stories: