மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

 

மயிலாடுதுறை,ஆக.12: மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பழ வியாபாரிகள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு நகர பழவியாபாரிகள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து ஏராளமான பழ வியாபாரிகள் பால்குடம் எடுத்து, பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் சிவதாண்டவ நடனத்துடன், மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதில் சில பக்தர்கள் வீதியிலேயே அருள்வந்து ஆடியது காண்போரை நெகிழ செய்தது. தொடர்ந்து பால்குடமானது கோயிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: