காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்.5ல் பொன்னேரி அடுத்த காளாஞ்சியில் கூட்டம் நடக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் செப்.5ல் நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். கருத்து கேட்பு கூட்டம் குறித்த புதிய தேதியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

The post காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: