திருத்துறைப்பூண்டி: சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் பேரிடர் காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் கலெக்டர் சாருக்கு, பொதுமக்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனச் செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் எதிர்வரும் பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்’ தங்களின் உயிர், கால் நடைகள் ,உடமைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்.
தங்களையும் சுற்றத்தார்களை எப்படி பாதுகாப்பது, பாதுகாப்பு மையங்களை- தயார்நிலையில் வைப்பது, உணவு, மின்சாரம், மருத்துவம், சுகாதாரம் வசதிகள் ஏற்பாடு செய்வது, முதியோர், நோயாளிகள், குழந்தைகள், கற்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள், மாற்றுதிறனாளிகளை பாதுகாப்பது எப்படி எனவும் உதவி எண்களான 1077 குறித்தும் மற்றும் பேரிடர் குறித்த கருத்துகளையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் பேரிடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.
