ராயனூர், பொன் நகர் சாலையில் மின் விளக்கு வசதிகள் அமைத்து தர வேண்டும்

கரூர்: கரூர், ராயனூர் பொன் நகர் பகுதியில் இருந்து திருச்சி பைபாஸ் சாலை வரை கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாநகர பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், திருச்சி பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், ராயனூர் வழியாக சென்று வருகின்றன. ராயனூர் பொன்நகர் – திருச்சி பைபாஸ் சாலை இடையே அதிக அளவு குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த இந்த பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை, இரவு நேரங்களில் மின் விளக்கு வசதி குறைவாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட தூரம் வரை இந்த சாலையில், கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராயனூர், பொன் நகர் சாலையில் மின் விளக்கு வசதிகள் அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: