கஞ்சா வழக்கில் மூதாட்டிக்கு 27 மாதம் சிறை

 

மதுரை, ஆக.9: கஞ்சா வழக்கில் மூதாட்டிக்கு 27 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலூர் அருகேயுள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமாயி(74). மேலூர் அரசு கலைக் கல்லூரி அருகே கடந்த 2021 மார்ச் 28ல் 4 கிலோ கஞ்சாவுடன் மேலூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். இருதரப்பு வாதங்கள் முடிந்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் ராமாயி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 27 மாத சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

The post கஞ்சா வழக்கில் மூதாட்டிக்கு 27 மாதம் சிறை appeared first on Dinakaran.

Related Stories: