விபத்தில் இறந்த கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: கலெக்டர் வழங்கினார்

 

தேனி, ஆக. 9: தேனி அருகே உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(39). இவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் கட்டுமானதொழீலாளர் நல வாரிய உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து, இறந்து போன கண்ணனின் மனைவி புவனேஸ்வரி தனது கணவர் இறந்ததையடுத்து கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் மூலமாக நிவாரண உதவி வேண்டும் என விண்ணப்பித்தார்.

இதனையடுத்து, கலெக்டர் ஷஜீவனா, கட்டிடத் தொழிலாளி கண்ணனின் மனைவி புவனேஸ்வரிக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.5 லட்சத்தை கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விபத்தில் உயிரிழந்த கண்ணனின் மனைவி புவனேஸ்வரிக்கு கலெக்டர் ஷஜீவனா ரூ.5 லட்சத்திற்கான நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புக்கான தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post விபத்தில் இறந்த கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: