ராணுவத்தின் அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஆக.9: இந்திய ராணுவத்தின் அக்னிவீர்வாயு தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: இந்திய ராணுவத்தின் அக்னிவீர்வாயு தேர்விற்கான பதிவு இணையவழியில் 27.07.2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 17-08-2023. அக்னிவீர்வாயு தேர்வுக்கு 27.06.2003 முதல் 27.12.2006 வரை பிறந்த திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், இவ்வலுவலக சமூகவலைதளமான https://t.me/vnrstudycircle என்ற TELEGRAM CHANNELல் சேர்ந்து அதில் பகிரப்பட்டுள்ள https://forms.gle/isdXZv82txyAjYCH8 என்ற Google Form-ஐ நிரப்புமாறும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர்வாயு விமானப்படை தேர்வில் பங்குபெற்று பயனடையலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ராணுவத்தின் அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: