செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புழல்: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சோழவரம் பாலம் அருகே போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது. செங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் முன்னிலை வகித்தார். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், ‘’நல்லூர் சுங்கச்சாவடியில் தினசரி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சர்வீஸ் சாலைகளில் லாரிகள் நிறுத்திவைப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. சர்வீஸ் சாலையில் மின் விளக்கு வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை, பெண்களிடம் அத்துமீறல் போன்றவை நடக்கிறது. எனவே இந்த பகுதியில் சுழற்சி முறையில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்’ என்றனர்.

‘’உங்கள் கோரிக்கை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆத்தூர் வழக்கறிஞர் சற்குணம், பழைய எருமைவெட்டிபாளையம் ஸ்ரீதர், ஜெகநாதபுரம் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: