விருதுநகர், ஆக.8: விருதுநகர், மல்லாங்கிணறில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் பாபு தகவல்: விருதுநகர் உள்ளரங்கு துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராமமூர்த்தி சாலை, அம்பேத்கார் தெரு, கஸ்தூரி பாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன் நகர், படேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங் காலனி, தந்திமர தெரு, எல்.ஐ.ஜி.
காலனி, பேராசியர் காலனி, கால்நடை மருத்துவமனை சாலை, கல்லூரி சாலை, எல்பிஎஸ் நகர், ரயில்வே பீடர் ரோடு, மெயின்பஜாரில் வடக்கு பக்கம், காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க் ரோடு, அழகர்சாமி தெரு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும். மல்லாங்கிணர் துணை மின்நிலையத்தில் ஆக.9(நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மல்லாங்கிணர், வலையங்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லுார், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The post விருதுநகர், மல்லாங்கிணறில் நாளை மின்தடை appeared first on Dinakaran.
