கோவில்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கல்

கோவில்பட்டி, ஆக. 3: உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆண்டுதோறும் ஆக.1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

கர்ப்பிணிகள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் கருதி குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்டுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு பேரீச்சம்பழம், கருப்பட்டி, கடலை மிட்டாய் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாபு, நாராயணசாமி, வீராச்சாமி, முத்து முருகன், இளங்கோ, மாரியப்பன், பூல்பாண்டி, செவிலியர்கள் தனலட்சுமி, அனிதா, லேப் டெக்னிஷியன் மகேஸ்வரி உள்பட செவிலியர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் மகராசி நன்றி கூறினார்.

The post கோவில்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: