குமுளி மலைச்சாலையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

 

கூடலூர், ஆக. 2: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கூத்த பெருமாள் மகன் முத்து கணேசன்(32). மினி வேன் டிரைவர். இவர் நேற்று நாகப்பட்டினத்தில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு கூடலூர், லோயர் கேம்ப் வழியாக கேரளாவுக்கு சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் கிளீனர் ஆக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மினி வேன் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள மலைச்சாலையில் வழித்துணைமாதா கோவில் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் முத்து கணேசன் மற்றும் ராஜேஷ் சிறு காயங்களுடன் தப்பினர். மினி வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இதனால் தமிழக பகுதியில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களும் மலைச்சாலையில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன. தகவல் அறிந்து குமுளி எஸ்.ஐ மூவேந்தன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்து கிடந்த வண்டியை பொக்லைன் வைத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து குமுளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமுளி மலைச்சாலையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: